பொருத்தமற்ற குளிரூட்டப்பட்ட நிலையில் யோகட் மற்றும் தயிர் தொகை ஒன்றை கொண்டு சென்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரி ஒருவருக்கு ரூபா 12 ஆயிரம்தண்ட பணம் செலுத்தும்படி ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு குற்றத்தை ஒப்பு கொண்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 639 யோகட் கோப்பைகளையும் 23 தயிர் சட்டிகளையும் அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கெ.எல்.வசந்த மற்றும் ஹோனசி பொது சுகாதார பரிசோதகர் டீ.வரதராஜா ஆகியோரே இந்த பொருட்களை கைப்பற்றி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.




