அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள் அச்சுறுத்தல் காரணமாக திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற ஒரு விமானம் கனடா நாட்டில் உள்ள ஹலிபாக்ஸ் நகருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற மற்றொரு விமானம் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்துக்கும் திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
பாரிஸ் தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் பதற்றத்துடன் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்இபற்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்ன? யாரிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்? என்பது தொடர்பான விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இவ்விமானங்கள் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானங்களில் இருந்து இறங்கிச் செல்வதை காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





