இலங்கை பெண்ணை கற்களால் தாக்கி கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவு!!

838

Saudi

பிறிதொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை கற்களால் அடித்து கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதுரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கே இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஷரியா சட்டத்திற்கு அமைய அந்த அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த இளைஞருடன் இந்த பெண் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறித்த இளைஞனுக்கும் 100 கசை அடிகளை தண்டனையாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பெண் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை தளர்த்துமாறு கோரி மேன்முறையீ்டு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான அமைச்சர் தலதா அத்துகோரள, சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.