பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை!!

423

541453330Franceபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின் போது அப்துல் ஹமீது அபாவுத் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.