Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அப்பிள் நீக்கியுள்ளது. இதை அப்பிள் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் இவ்வாறு நீக்கப்பட்ட சில அப்ளிகேஷன்களை ஆப்ஸ் ஸ்டோர் தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மறுபடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.