தலைமுடியை சாப்பிடும் விநோத பெண் – வயிற்றுக்குள் வந்த வினை

331

Trichophagia-The-Belgravia-Centreஉத்திரபிரதேசத்தில் பெண் ஒருவரின் வயிற்றிற்குள் இருந்து 5 அடி நீளமுள்ள தலைமுடி பந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கவிதா குமாரி(15) என்ற பெண், முடியை சாப்பிடும் விநோத வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நேரத்திற்கு உணவு அருந்துவதை விட தலைமுடி உண்ணுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார், இதனால் வயிற்றுவலியும், வாந்தியும் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளானார். மேலும் இவரால் உணவு அருந்த முடியவில்லை, வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதாவுக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவளுடைய வயிற்றில் 5 அடி நீளமுள்ள தலைமுடி பந்து இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலைமுடி பந்து அகற்றப்பட்டுள்ளது.