பிரதமர் வீட்டிற்கு முன் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!!

603

1 (3)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் எதிரே நேற்றிரவு துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது.

டெல்லி பொலிசாரின் சிறப்புப்படை பிரிவு பிரதமர் மோடி வீட்டின் பாதுகாப்பை கவனித்து வருகிறது. நேற்று இரவு பாதுகாப்பு பணிக்கு வந்த ஒரு பொலிஸ்காரரின் துப்பாக்கி திடீரென சரமாரியாக தானாகவே வெடிக்கத் தொடங்கியது.

பிரதமரின் வீடு எதிரே துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொலிஸ்காரரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தது என்பதை அறிந்ததும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.