இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப்பெண் தெரிவு!!

443

Surenthini-Sithamparanathanஇலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார்.

இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.