அரிசியின் விலைகள் குறைப்பு?

483

Rice

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.

வழமையான தினப்பணிகள் நிறைவடைந்ததும், வரவு – செலவுத்திட்ட அறிக்கையின் முதலாவது வாசிப்பை அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்தார்.

கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனால் அரிசிகளின் விலைகள் குறையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.