பிரான்ஸ் மீது ரசாயன ஆயுத தாக்குதல் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் பிரதமர் வால்ஸ்!!

353

pm_valls_says_002பிரான்ஸ் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, அடுத்த தாக்குதலை தீவிரவாதிகள் முன்னெடுக்கும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாரிஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரான்ஸ் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தேச நலன் கருதி தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால நிலையை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என ஒருமித்த கருத்துடன் முடிவானதையடுத்து, பேசிய பிரதமர் மானுவல் வால்ஸ்,

பிரான்ஸ் நாட்டில் ரசாயனம் அல்லது உயிரியல் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக வெளியே கட்டமைக்கப்படும் சதி செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக் பகுதியில் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அதுபோன்ற ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.பாரிசில் கடந்த சில தின்ங்களுக்கு முன்பு ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியான 28 வயது Abdelhamid Abaoud என்பவனையும் பிரென்சு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலை அடுத்து பிரான்சில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.