நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண்!!

327

spoon-03நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்பூனையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

ஸ்பூன் தொண்டையை தாண்டி கீழ் பகுதிக்கு சென்று விட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தான் ஸ்பூனை விழுங்கி விட்டதாகவும் ஆனால் வலி ஏதுமில்லை எனவும் டாக்டரிடம் அந்த பெண் தெரிவித்தார். ஆனால் மருத்துவர்கள் அவர் எதோ ஸ்பூனை விழுங்கியதாக விளையாட்டாக கூறுகிறார் என நினைத்தார்கள்.டாக்டர்கள் சிடி ஸ்கேன் எடுத்து அதனை பார்த்த போது தான் அவர் கூறியது உண்மை என தெரிந்தது.

பின்னர் டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த ஸ்பூனை அகற்றினர். அதிர்ஷட வசமாக அந்த ஸ்பூன் பெண்ணிற்கு ஆபத்து எதையும் ஏற்படுத்த வில்லை. இல்லை என்றால் கடுமையான் வலியும் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டு இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.