நயினாதீவு பெயர் மாற்றம் எதிர்க்கவேண்டிய ஒன்றே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

325

Sampanthan_2103231f

நயினாதீவு எனும் தமிழர் கலாசாரத்தோடு தொடர்புபட்ட நாமம், நாகதீப என மாற்றப்படுவதற்கு என்னுடைய எதிர்ப்பும் நிச்சயம் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பெயர் மாற்றம் தொடர்பில் கருத்துரைத்த இரா.சம்பந்தன்,

நாகதீபவின் பெயரை நயினாதீவு என்று மாற்றுவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான செயற்திட்டங்கள் குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து ஒரே நாட்டுக்குள் நாம் பிரிந்து வாழ முடியாது.

நாகதீப விகாரைக்கு நானும் சென்றுள்ளேன். அங்குள்ள பிக்கு கட்டிய பிரித் நூல் இன்னும் என் கையில் உள்ளது. நாகதீப விகாரை போல நயினாதீவு கோயிலும் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நடக்க முயற்சிக்கும் போது ஒரு சிலர் பிரித்தாள முயற்சிக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.

எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தின் தவறுகளை உரியநேரத்தில், உரிய முறையில் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.