முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகனம் விபத்து!!

484

கிளிநொச்சி ஏ35 முல்லைத்தீவு பரந்தன் வீதி புளியம்பொக்கனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒன்று விபத்துக்குள்ளகியது.

முல்லைத்தீவில் இருந்து பரந்தன் நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்த வாகனச் சாரதி கட்டுப்பாட்டை இழந்தார்.

வீதியை விட்டு விலகிய வாகனம் வயலுக்குள் பாய்ந்து கரணம் அடித்து பலத்த சேதமடைந்துள்ளது. இதில் பயணம் செய்த இருவர் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்கள்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

1 2