வவுனியாவில் வசதி குறைந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

531

17.11.2015 சர்வதேச மாணவர் தினத்தை முன்னிட்டு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் கனடா வாழ் உறவுகள் மூலம் ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தர கலை பிரிவில் கல்வி கற்க்கும் கஸ்தூரி என்ற தந்தையை 2009 யுத்த செல் வீச்சில் பறிகொடுத்து வறுமையிலும் கற்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கற்றுவரும் மாணவிக்கு துவிசக்கரவண்டியும், மாதாந்தம் 3000 ரூபா கற்றல் செலவுக்கும் என வழங்கி வைக்க பட்டது .

கோவில்குஞ்சுகுளம் பாலமோட்டையில் 4 பெண் சகோதரங்கள், தாயுடன் வாழ்ந்து வரும் கஸ்தூரி கற்றல் செயற்பாட்டை வறுமையின் காரணமாக கைவிடுவதட்க்கு தீர்மானித போது அதிபர் திரு சு.திருஞானசம்மந்தமூர்த்தி அவர்கள் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களுக்கு தெரியபடுத்தவே, அவர் கனடாவில் வாழும் ஒரு அன்பருக்கு தெரிய படுத்தியதன் மூலம் பஸ்ஸில் பயணித்து உயர்தர கற்றல் செயற்பாட்டை கற்று வரும் கஸ்தூரிக்கு ஒரு துவிசக்கர வண்டியும், மாதாந்தம் 3000 ரூபா கற்றல் செலவுக்கும் என வங்கி வைப்பிலிட்ட கணக்கு புத்தகமும் வழங்கி வைக்க பட்டது .

பாடசாலை அதிபர் திரு சு.திருஞானசம்மந்தமூர்த்தி, ஆசிரியர் திருமதி அரவிந்தன், மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) ஆகியோர் வழங்கி வைத்தனர்.

DSCN8948 DSCN8950 DSCN8951 DSCN8952 DSCN8954 DSCN8960 DSCN8962 DSCN8964 DSCN8965 DSCN8966 DSCN8967