நேற்று (22.11.2015) மாலை 7.00 மணியளவில் வவுனியா ரோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்..
தற்போது பாரிய பிரச்சனையாக காணப்படும் மீள்குடியேற்றம் விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கின்றார்கள். எமது ஜனாதிபதிக்கு தெரியும் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் பாரிய பங்குவகித்துள்ளது.
அரசியல் கைதிகள் விடயத்தில் நல்ல சில விடயங்களை எடுத்த வண்ணம் உள்ளார். அந்த மக்களின் அரசியல் கைதிகளின் குடும்பம் படும் அவஸ்தைகள், அவர்களது பிள்ளைகள் படும் அவஸ்தைகள் அந்த குடும்பத்திற்கு நல்லதொரு எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி நல்லதொரு முடிவினை எடுப்பார் என நம்புகின்றேன்.
இவ்வாண்டு நல்லதொரு வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது. வன்னிப் பகுதிகளுக்கு உகந்ததாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யும் போது அவர்களுக்குரிய வாழ்வாதார பிரச்சனைகள் ஏற்படும். அந்த வாழ்வாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு பாரிய பங்களிக்கும் விதமாக கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, விவசாயத்துறை பாரியளவு அபிவிருத்தி மேற்கொள்ளும் விதமாக இந்த வரவுசெலவுத்திட்டம் காணப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் தெரிவித்தமைக்கு அமைய எனது எனது ஒரு மாத சம்பளத்தினை மக்களின் தேவைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளேன். எனவும் கருத்து தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-







