எட்டு தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது குறித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ், கனேடியன் தமிழ் தேசிய கவுன்சில், தமிழர் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மீதான தடைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என, அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2014ம் ஆண்டு 424 தனிநபர்கள் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு தடைசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 269 பேர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய 155 பேர் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.





