தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கலாம்!!

1056

Paskolos-SMS-žinuteஅடுத்த ஆண்டு ஜனவரி ஆரம்பம் முதல் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரித் திருத்தத்தின் படி சில தொலைபேசிக் கட்டணங்கள் அதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 11ஆக இருந்த வெட் வரியை நூற்றுக்கு 12.5 வரை அதிகரிக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச தொலைத் தொடர்பு கட்டணங்கள் தசம் மூன்று டொலர் வரை உயர்வடையவுள்ளது.

இதற்கு அமைய தொலைபேசிக் கட்டணங்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதி அமைச்சு கூறியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணங்களில் மாற்றம் ஏற்படாது என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து அறிந்து கொள்ள நிதி அமைச்சினால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் தகவல் முகாமைத் திணைக்களத்தினால் 24 மணித்தியாலங்களுக்கும் குறித்த பிரிவு செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி 071 024 23 10 , 071 024 23 11, 071 024 23 12 , 071 024 23 13 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது 0112 43 10 28 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் இது குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதற்கு மேலதிகமாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்வதன் மூலமும் வரவு செலவுத்திட்டம் குறித்த விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.