பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமான மழை பெய்தும் சாலையில் தண்ணீர் தேங்கவில்லை!!

302

banglore_rains_002பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமாக மழை பெய்தும் சாலையில் எங்கும் தண்ணீர் தேங்காமல் இருந்துள்ளது.பெங்களூரில் பொதுவாக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவுடன், குளிர் வாட்ட தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மழை பெய்து வருகிறது.நேற்று இரவு வரையிலான வாநிலை நிலவரப்படி, பெங்களூரில், நவம்பர் மாதத்தில் மட்டும், 256.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

1916ம் ஆண்டு நவம்பர் மாதம், பெங்களூரில் 252.2 மில்லி மீட்டர் மழை பெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது, 99 வருடங்களுக்கு பிறகு, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு நிகரான மக்கள் தொகை கொண்டுள்ள பெங்களூரில், 5 மடங்கு அதிக மழை பெய்தும்கூட, சாலையில் மழை நீர் குளம், குட்டை போல தேங்கவில்லை.
பெங்களூரிலுள்ள திறமையான வடிகால் வசதி இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.