உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா??

336

1842a8d2-3de8-4866-80ae-cb2da2c328b4_S_secvpf (1)உடற்பயிற்சி செய்வதன் மூலம், தினமும் 500 கலோரி எரித்தால் போதுமானது. தினமும் 20 நிமிடங்கள் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவே, அளவான உடற்பயிற்சி ஆரோக்கியமானது.நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள
ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட்,பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.