கடந்த முப்பது வருட காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்கள் நினைவு கூருகின்ற போர்வையில் மீணடும் புலிகள் உயிரூட்டப்படுவதை நாம் ஏற்கப்போதில்லை என பாராளுன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரவித்தார்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறவுகளுக்கு அஞ்சலி செய்ய இடமளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது வரவு – செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக வழக்கமாக இருந்துவருவதன் அடிப்படையில் போரினாலோ அதன் தாக்கத்தினாலோ உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை யாவருக்கும் உண்டு.
நவம்பர் மாதத்திலேயே உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்கமும் வந்தது. அந்தவகையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தேன். இதன்மூலம் ஒவ்வொரு போராளி அல்லது வீரரும் நினைவு கூரப்பட வேண்டும்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றல்லாது நினைவுகூரல் என்பது சகலருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். நான் ஆழியவளை மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. அவ்விடங்கள் தற்போது தென்னந்தோப்புக்களாக மாறியுள்ளன.
நவம்பர் மாதத்தில் இறந்த ஆத்மாக்கள் நினைவுகூரப்படுகின்ற நிலையில் மேற்படி ஆழியவளை மற்றும் உடுத்துறை பிரதேசங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தினால் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.
யுத்தத்தின் போதும் யுத்த காரணங்களினா லும் மரணித்த உறவுகளுக்கு அவர்களது உற வுகள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங் கம் அனுமதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இந்த நிலைப்பாடு தொடர்பில் எம்மத்தியில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இதன் போது ஒருவருக்கு உறவினராக இருக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி செய்ய அனுமதிப்போம். ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற பேரில் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட எவரும் எதிர்பார்த்திருப்பார்களாயின் அவர்களை நாம் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை





