முதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்!!

243

Australia-vs-New-Zealandஅவுஸ்­தி­ரே­லியா – நியூ­ஸி­லாந்து அணிகளுக் கிடை­யி­லான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-­இ­ரவு போட்­டி­யாக எதிர்­வரும் 27ஆம் திகதி பிரிஸ்­பேனில் தொடங்­கு­கி­றது.

கிரிக்கெட் வர­லாற்றில் இது தான் முதல் பகல்- இரவு டெஸ்­டாகும். இந்த டெஸ்­டுக்கு பிரத்தி­யே­க­மாக இளஞ்­சி­வப்பு நிற (பிங்க்) பந்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இதற்கு முன்­னோட்­ட­மாகஇ மேற்கு அவுஸ்­தி­ரே­லியா லெவன்- – நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டையே 2 நாள் பயிற்சி ஆட்டம் பெர்த்தில் பகல் -இர­வாக நடத்­தப்­பட்­டது. இதில் இளஞ் சிவப்பு நிற பந்து வீசப்­பட்­டது. முதல் இன்­னிங்ஸில் மேற்கு அவுஸ்­தி­ரே­லிய லெவன் அணி 345 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்தது. சாம் ஒயிட்மேன் 117 ஓட்­டங்­களைப் பெற்றார்.

தொடர்ந்து விளை­யா­ டிய நியூ­ஸி­லாந்து அணியில் தொடக்க ஆட்­டக்­காரர் குப்டில் அசத்­தினார். இளஞ்­சி­வப்பு நிற பந்­து­களை நொறுக்கி 103 ஓட்­டங்­க ளைப் பெற்ற அவர் பின்­வ­ரிசை வீரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்­டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளி­யே­றினார்.

நியூஸி. அணி 426 ஓட்டங்கள் குவித்த நிலையில், பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது.