
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா, நடக்காதா என்று பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இருநாட்டு ஆலோசகர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
போட்டிகளை இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ நடத்த எதிர்ப்புகள் நீடித்து வருவதால் பாதுகாப்பு குறித்து போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





