வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் இன்று பதவியேற்றார்!!(படங்கள்)

550

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற மதப் பிரார்த்தனைகளையடுத்து சுப நேரமாகிய காலை 9.45 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்று  புதிய அரச அதிபராக ரோகன புஸ்பகுமார கையொப்பமிட்டார்.

கடந்த 2012 மே மாதம் 18 ஆம் திகதி முதல் கடமையாற்றிய முன்னாள் அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர இரத்தினபுரி மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக மாற்றாகி சென்றுள்ள நிலையில், தமது கடமைகளை இன்றைய தினம் புதிய அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

சிறப்பான வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், முன்னாள் அரசாங்க அதிபர் எம்.கே. பந்துல ஹரிச்சந்திர, திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரி வந்தமையும், வடமாகாண சபையில் முன்னாள் அரசாங்க அதிபரை மாற்ற வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

SAMA1-e1448348323318 SAMA2-1024x768