வவுனியாவில் 15 ஏக்கரில் தேசிய விளையாட்டு மைதானப் பணிகள் ஆரம்பம்!!

628

வவுனியா ஓமந்தை அரசகுடியிருப்பு பகுதியில் 15 ஏக்கர் காணியில் வவுனியா மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமான தேசிய விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சு 225 மில்லியன் ரூபாவில் அமைக்குமஅமைக்கும் வேலைத்திட்டம் நேற்று(23.11) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இவ் விளையாட்டு மைதானத்தில் நீச்சல்தடாகம், உள்ளக விளையாட்டு அரங்கு ஓட்டமைதானம், வாகனத்தரிப்பிடம் உட்பட பல நவீன வசதிகளுடன் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

சமய சம்பிரதாயங்களுடன் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் இவ் வைபவத்தில் வீரகத்தி பிள்ளையார் ஆலய பூசகர், ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கு.சண்முகலிங்கம், கிராமஅபிவிருத்திச் சங்க இணைப்புச் செயலாளரும் வவுனியா தெற்கு கல்வி வலய அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.வரதகுமார்,

வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகார் சமன், வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார, இக் கட்டடத் தொகுதியை அமைக்கும் எஸ்.எஸ்ஆர் கட்டிட நிறுவன இயக்குனர் பி.சசிகுமார் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

20151123_104449 20151123_104524 20151123_104527 20151123_104708 20151123_105253 20151123_105736