வவுனியாவில் கமநல காப்புறுதிசபைக் காரியாலயம் திறந்துவைப்பு!!(படங்கள்)

592

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பறுதிச் சபையின் நிரந்தர காரியாலயம் இன்று (24.11.2015) புதிய அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாக கோவில்குளம் கமநல கேந்திர நிலையத்துடன் செயற்பட்டு வந்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் நிரந்தர காரியாலயம், வவுனியா மாவட்ட செயலகத்தில் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பறுதிச் சபையின் நிர்வாகப் பணிப்பாளர் திரு.பண்டுக வீரசிங்க தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ரோகண புஸ்பகுமார மற்றும் முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர ஆகிய இருவரும் இணைந்து இக்காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகநாதன், மாவட்ட
விவசாயப் பணிப்பாளர் திருமதி ல.ஈஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.கிருபாசுதன், பிரதேச செயலாளர்கள் திரு.கா.உதயராஜா, திரு.ஜானக உதவி மாவட்ட செயலாளர் திரு.கமலதாசன், காப்பறுதிச் சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு.எஸ்.வீரசிங்க வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பறுதிச் சபையின் பதில் உதவிப் பணிப்பாளர் திரு.பு.பூரணச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,

அதிகாரிகள், கமநலக் காப்புறுதிச் சபையின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்
இந்நிகழ்வில் 18 பேருக்கான விவசாய ஒய்வூதியக் கொடுப்பனவாகிய 306 300 ரூபா
பயனாளர்களுக்கு அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

P1010001 P1010009 P1010018 P1010048 P1010064