அநுராதபுரத்தில் கடத்தப்பட்ட மாணவி நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

580

Kidnap

அநுராதபுரம் நகரில் வைத்து நேற்று முற்பகல் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் மூவருடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தன.

35 வயதுடைய திருமணமான ஒருவரினாலே குறித்த மாணவி கடத்தப்பட்டதாக சந்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் கடத்தி செல்லப்பட்ட மாணவி பின்னர் மோட்டார் வாகனத்தில் அநுராதபுரம் பொதானகம பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் நீர்கொழும்பு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிகாரிகளிடம் மாணவி குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவிக்குகாதல் தொடர்பு ஒன்று இருந்ததாகவும், அவரது முன்னாள் காதலரே இவ்வாறு யுவதியைக் கடத்தியிருக்க வேண்டும் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.