வவுனியா சிவன் முதியோர் இல்ல ஸ்தாபகருக்கு உள சமூக மேம்பாட்டாளர் விருது!!

525

Untitled-1

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவன் முதியோர் இல்லத்தின் ஸ்தாபகரும் திருக்கோவிலின் அறங்காவலருமாகிய ஆறுமுகம்  நவரட்ணராஜா அவர்களுக்கு  வவுனியா  மாவட்ட மனநல சங்கத்தினர்  நேற்று (25.11.2015)  வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைத்தியர் எஸ் .சிவதாஸ் எழுதிய சிறுவர்களுடன் என்னும் நூல் வெளியீட்டு விழாவின் போது உளசமூக மேம்பாட்டாளர் என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கபட்டார்.

மேற்படி விருதானது  வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலினூடாக  மேற்கொள்ளப்பட்டுவரும்   சிறுவர் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட சமூகபணிகளை பாராட்டும் விதமாக வழங்கபட்டது .