இந்தோனேஷியாவில் இலங்கை அகதிகள் தப்பியோட்டம்!!

608

indo

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் காணாமல் போனதன் மர்மம் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.