ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி!!(வீடியோ)

621

Train

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக் கொண்ட வந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.

படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த இளைஞர் தீம்பிவில்லி பகுதியை சேர்ந்த பவேஷ் என்பது தெரியவந்துள்ளது. பவேஷ் தவறி விழும் காட்சியை ரயிலில் பயணம் செய்த சக பயணி ஒருவர் தனது செல்பேசியில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.