வவுனியா நகரசபையின் செயலாளர் தீடீர் இடமாற்றம்!!

612

Vavuniya UC

வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை முன்னைய செயலாளர் க.சத்தியசீலன் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா தெற்கு பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் தர்மேந்திரா வவுனியா நகரசபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் நகரசபையின் செயலாளராக கடந்த 2 வருடங்களாக பணியாற்றிய க.சத்தியசீலன் வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் நகரசபைச் செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.