ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த மேகக்கூட்டங்கள்-அதிர்ச்சி தரும் வீடியோ!!

332

sunamiclouds_002சுனாமி என்ற வார்த்தையை கேட்டாலே மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படும். ஏனெனில், கடந்த 2004 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.

இந்நிலையில் சுனாமி மேகம் என்ற இயற்கையின் சீற்றம் உருவாகியிருப்பது மக்கள் மத்தியில் ஒரு வித ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள போண்டி கடற்கரையில்(Bondi Beach) மேகக்கூட்டங்கள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில், ஈரமான காற்று மற்றும் குளிர்ப்பதம் நிலவிவந்தாலும் இது ஆபத்தானது என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உள்ளுர் நேரப்படி மதியம் 3 மணிக்கு நிலவிய இந்த வானிலை மிகவும் மோசமானது என எச்சரித்துள்ளனர்.

இந்த காட்சியை நேரடியாக பார்த்த Hannah Murphy என்பவர் கூறுகையில், நாங்கள் கடற்கரை பகுதியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெரிய அலை ஒன்று வருகிறது என் அச்சத்தில் எல்லோரும் ஓடினோம், ஆனால் அது மேகங்களின் கொந்தளிப்பு என்பதை உணர்ந்து அதனை அனைவரும் படம்பிடித்தோம் எனக்கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.