சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?

527

india-photos-54காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த யுவதி, தனது வீட்டிலிருந்து 27ம் திகதி இரவு வேளையில் வெளியே சென்றுள்ளதாகவும், இது குறித்து 28ம் திகதி காலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் முறைபாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் அடையாளம் காணப்பட்டு மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, தனது மகள் காதல் விவகாரம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது தாய் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இச் சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.