இலங்கை அகதி மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி!!

501

Wrist-Cut

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

இவரது புகழிடக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கீழே இறக்கப்பட்டுள்ளதோடு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இவர் ஆரன் மயில்வாகனம் எனும் 30 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.