வவுனியா நகரசபை எல்லைக்குள் இருக்கும் வீதி மின்விளக்குகள் பழுதடைந்து ஔிராத நிலையில் காணப்படுகின்றது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட சூரியசக்தியை மூலம் இயங்கும் மின்விளக்குகளும் ஔிராத நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக வவுனியா பஸ் நிலையத்தில் காணப்படும் வீதி மின் விளக்குகளும் ஔிராத நிலையில் காணப்படுவதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது
எனவே இவ்விடயம் சம்பந்தமாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






