வவுனியாவில் கடை உடைத்து திருட்டு!!

506

திருட்டு2

வவுனியா, கோதாண்டர் நொச்சிக்குளத்தில் கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அங்கர் பால்மா உள்ளிட்ட சுமார் 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியாவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.