வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டத்திற்கு அருகே பஸ் வண்டி ஒன்று இன்று குடை சாய்ந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் கிராமத்திற்கு அருகே சுந்தரபுரம் – வவுனியா பாதையில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்று வீதியை வீட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
இவ் விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கருத்து தெரிவிக்கையில்..
இவ் மரக்காரம்பளை வீதியானது கடந்த சில வருடங்களாக வாகனங்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது எனவும் இந்த பஸ் வண்டியானது பள்ளத்தில் விழ்ந்த போதே இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவித்தார்.






