தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே : பா.உ சி.சிவமோகன்!!

512

Sivamohan MP

28.11.2015 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டபோது வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையில் தெரிவிக்கையில்…

எமது பெருந்தொகையான வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் விடயங்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது. வெள்ளைவான் கடத்தலில் சிங்கள இளைஞர்களும் காணாமல் செய்யப்பட்டுள்ளனர்.

படையினரால் வீட்டிலும் றோட்டிலும் தடைமுகாம்களிலும் கைது செய்யப்பட்டபின் காணாமல் செய்யப்பட்டுள்ளனர். 2009 இறுதியுத்தத்தின்பின் அரச படையினரிடம் சரணடைந்த பின் காணாமல் செய்யப்பட்டோர் என விடயங்கள் விரிந்து செல்கின்றன.

இது அரச பயங்கரவாதமில்லையா? இதைசெய்தவர்கள் அரச பயங்கரவாதிகள் இல்லையா? அரசு என்றால் அது அரசியல் யாப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு என்பதை நாம் அனைவரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.