கஹதுடுவ – திசங்கோட பகுதியில் கப்பம் பெற முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் போலி பொலிஸ் அதிகாரிபோல் அழைப்பினை மேற்கொண்டு வர்த்தகர் ஒருவரிடம் 7000 ரூபா பணம் கோரியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வர்த்தகர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதோடு அவர்களது திட்டத்தின் படி கப்பத்தை வழங்க முற்பட்ட வேளை, சந்தேகநபரை கையும்களவுமான கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர் 48 வயதான ஒருவர் என்பதோடு இன்றையதினம் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





