2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20ம் திகதி நியதிமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நவம்பர் 21ம் திகதி இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. தொடரந்து ஒன்பது நாட்களாக இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.




