யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

637

youtube

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் மீண்டும் Play செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு Play செய்யும்போது வீடியோவானது மீண்டும் Load ஆகிதான் திறக்கும். வீடியோவானது அதிகநேரம் ஓடக்கூடியது என்றால் வீடியோ திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும் பார்த்த வீடியோவை மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் ஒரு வழி உள்ளது.

அதற்கு நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் URL-ல் Repeat என்ற வார்த்தையைச் சேர்த்தால் போதும். உதாரணம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின்
URL http://www.youtube.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp

இப்படி இருக்கும். அந்த URL-ல் youtube என்று முடியும் இடத்தில் repeat என்ற வார்த்தையை தட்டச்சிட்டு என்டர் செய்யுங்கள்.

http://www.youtuberepeat.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp என்ற வார்த்தையை சேர்த்தால் போதும்.

உடனே அந்த URL  இந்த தளத்திற்கு ( http://www.listenonrepeat.com/watch/?v=-Gq1oPg3LT4&feature=plcp) redirect ஆகிவிடும். இப்போது இந்த வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்வையிடலாம். நீங்கள் நிறுத்தும் வரை வீடியோவானது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இப்பதிவை வீடியோவாகவும் நீங்கள் காணலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமெனில் இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.