வீசிய சூறாவளிக்காற்று: வானில் வட்டமடித்து தப்பித்த விமானம் !!(வீடியோ இணைப்பு)

310

flight_escape_002பலத்த சூறாவளிக்காற்றால் விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில் மோசமான வானிலை காரணமாக மணிக்கு 112 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது.

இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது.

இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானில் வட்டமடிக்க செய்து பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளார். மேலும் இந்த பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளின் கூரைகள் காற்றில் பறந்துசென்றுள்ளது.