இடியுடன் கூடிய கடும் மழை இன்று பெய்யும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

849

Malai

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் அனைத்து கடலோர பகுதிகளிலும் இன்று கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடலோரங்களில் இடி, மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும், அனைத்து மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.