பாடசாலைக்கு செல்லும் வழியில் விஷமருந்திய மாணவிகள்!!

538

media-5386-12953 (1)இறம்பொடை பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவிகள் மூவர், இன்று (03) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் விஷமருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இறம்பொடை – கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விஷமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பாடசாலைக்கு செல்லும் வழியில் கெமிலிதென்ன தோட்டத்தில் வைத்து மூன்று மாணவிகளும் விஷத்தை அருந்தியுள்ளதாக, பாடசாலைக்குப் பெற்றோர் அறிவித்துள்ளனர். மேலும் அவர்களை அங்குள்ள அயலவர்களின் உதவியுடன் கொத்மலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, மூவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் தொடர்ந்தும் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்களை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.