இலங்கை கிரிக்கெட் தேர்தலில் திலங்க சுமதிபால!!

568

z_p14-The-100-dayஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக திலங்க சுமதிபால வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவியின் பொருட்டே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபால, பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 24ம் திகதி ஆரம்பமானது. மேலும் டிசம்பர் 4ம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.