வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

582

1442385505

வவுனியா, மஹகச்சிகொடிய, 83 வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதுடைய சிலாபம், குமாரஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.