ரஸ்யரின் கழுத்தை வெட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

313

russia

உலகில் பல்வேறு இயக்கங்கள் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றபோதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த அமைப்பினர் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் மோசமாக வீடியோக்களை வெளியிட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோவை அவர்கள் வெளியிட்டள்ளனர்.

அந்தவகையில், நபரொருவரின் கழுத்தை வெட்டிப் படுகொலை செய்யும் காணொளியொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது.உளவாளி எனக் கூறப்படும் ரஸ்ய நாட்டவர் ஒருவரின் கழுத்தையே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இவ்வாறு வெட்டியுள்ளனர்.அவர்களின் ஊடகப்பிரிவின் ஊடாகவே அக்காணொளி அவர்கள் வெளியிட்டுள்ளனர்.குறித்த காணொளியில் கழுத்தை வெட்டும் நபரும் ரஸ்ய நாட்டவரை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.