என் இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, நடிகர் விவேக் வேதனை.

470

aadhar_tamil_movie_stills_mahesh_mithra_kurian_samuthirakani_9678904சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து வெள்ளத்தால்  தமிழகமெங்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வசதி படைத்த மனிதர்களும் தங்களால் ஆன உதவியை செய்துவருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.அதில், நான் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். என் சக குடிமக்களின் நிலையைக் கண்டு எனது இதயத்தில் இருந்து ரத்தம் வழிகின்றது. ஆனாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் மனிதர்கள் தங்கள் சக மனிதர்களிடம் காட்டும் மனிதாபிமானத்தைக் கண்டு நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.