47 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!

951

பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படின் விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்ற முடியுமென பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய- பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பொறுப்பில் இவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப் படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.



கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தாங்கள் நிரபராதியென நிரூபிப்பதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக உபவேந்தர் மஹிந்த ரூபசிங்ஹ தலைமையில் கூடிய நிர்வாகச் சபையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.