வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

534

கடந்த நாட்களில் நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வடபுலத்து மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டும் இடம்பெயா்ந்தும் இருந்ததை நாம் யாவரும் அறிவோம்.

அந்த வகையில் மன்னாா் மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய ஒன்றியத்தினால் மன்னாா் மாவட்ட கிறிஸ்தவ மதகுருமாா்களின் அனுசரணையுடன் கடந்த 25.11.2015 அன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை சமாதான நீதவானும், வன்னிமாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களின் இணைப்புச் செயலாளரும், கலாநிதியும் மதகுருமான எஸ்.சந்திரக்குமாா் அவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு அவா், தம் கரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தாா்.

அத்தருணத்தில் அனைத்து சபைகளின் மதத்தலைவா்களும் அவருக்கு தனது நன்றியை தொிவித்துக் கொண்டனர்.

11048681_884140808339886_4044780915192774415_n 11218820_884141165006517_3477690564110297200_n 12246798_884140805006553_8593391855287668288_n (1) 12274636_884141635006470_3737156926349366409_n 12310594_884141215006512_8398126057787323345_n 12311094_884141501673150_403480172011974361_n 12311170_884141008339866_2284305438899036189_n 12311180_884141288339838_4044687282689996324_n 12313817_884141011673199_5642839898372766355_n 12316191_884141221673178_5832826160096787532_n 12316652_884140995006534_7490030818416310986_n