யாழ் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

634

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி – புத்தூர் அன்னம்மாள் ஆலயத்திற்கு அருகாமையில் இந்து விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி அதே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சின்னக்குஞ்சு உதயராசா (வயது 55), ஜேசு அன்பு (வயது25) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தொடரபான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 12 13